+2 மாணவி கொலை.. இளைஞருக்கு நீதிமன்ற காவல்

34பார்த்தது
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திப் படுகொலை செய்த முனிராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று (நவ., 19) காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை பின்தொடர்ந்து சென்ற முனிராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். மாணவி உயிரிழந்த நிலையில், கைதான குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி