அரசு பஸ் கண்ணாடியை உடைத்த விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

5398பார்த்தது
அரசு பஸ் கண்ணாடியை உடைத்த விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை
விழுப்புரம் திண்டிவனத்தில் கடந்த 14.03.2023 அன்று பாஜக கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விசிக பிரமுகர் தென்னரசு (38) அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தார். இது தொடர்பான வழக்கு திண்டிவனம் கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தென்னரசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி ஹேமந்திர குமார் நேற்று (பிப்., 18) தீர்ப்பளித்தார்.