திருப்பூர் அருகே 3 பஸ்கள் மோதி 20 பேர் படுகாயம்

15பார்த்தது
திருப்பூர் அருகே 3 பஸ்கள் மோதி 20 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கிச் சென்ற மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.