அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம்

0பார்த்தது
தருமபுரியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று (மே 23) நள்ளிரவு புறப்பட்ட அரசு பேருந்து, மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி அருகே உள்ள வளைவில் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 20 பேரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொரப்பூர் காவலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி