இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 200 அமமுக நிர்வாகிகள்

31பார்த்தது
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 200 அமமுக நிர்வாகிகள்
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 200 பேர், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைந்தனர். டிடிவி தினகரன் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை கோரியுள்ள நிலையில், இந்த நிர்வாகிகள் இணைப்பு அமமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.