ஜார்கண்ட் மாநிலத்தின் மகத், அமராபலி ஆகிய பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 200 டன் சட்டவிரோத நிலக்கரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி கடத்தலை தடுக்கும் மத்திய அரசின் பூஜ்ய நிலக்கரி கசிவு கொள்கையின் கீழ் நடத்தப்பட்ட இச்சோதனையில், நிலக்கரி மாபியா கும்பலுக்கு எதிராக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 10 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.