200 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சராக ஜோசப்
விஜய் இன்று (மே 10) பதவியேற்ற நிலையில், இலவச மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டார். அரசாணையில், 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் தொடர்கிறது. வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500-க்கும் மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.