'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் பயன்

64பார்த்தது
'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் பயன்
'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தில் இதுவரை 21 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்., 17) வேளாண் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. நெல், தென்னை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you