தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு

40பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 4 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் சென்று கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி