கும்பகோணத்தில் 2004ம் ஆண்டு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சோகச் சம்பவத்தின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை.16) அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவிடத்தில் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், தங்களுக்கு குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை வைத்து பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.