கடந்த 5 ஆண்டுகளில் 23.56 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் கட்ட திட்ட அனுமதி முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் புதிய வீடுகள், நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கீழ் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.