தவெக மற்றும்
காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கொண்டு அமைச்சரவை இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தவெக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் தூத்துக்குடி ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்.