வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். வடக்கு கோர்டோஃபான் மாகாணத்தில் நேற்று (பிப்., 07) ரஹாத் நகரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய சூடானில் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துணை ராணுவத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே 2023 முதல் மோதல் நடந்து வருகிறது.