இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதல் அபராத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை ரஷ்யாவில் இருந்தே வாங்கியதாக கூறிய டிரம்ப் புதிய வரி விதிப்பு ஆக.1 முதல் நடைமுறைக்கு வரும் என்றார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் தான் அதிக வரிகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.