முகத்தை சிதைத்து 25 வயது இளம்பெண் கொலை.. உடல் தோண்டி எடுப்பு

7600பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டு அரைகுறையாக புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி