உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து, நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத் தட்டச்சு திறன் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.07.2026 தேதியின்படி வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். மாதம் ₹35,400 ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.10.2026.