ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக நீர் திறக்கக் கோரி 25,000 விவசாயிகள் கையெழுத்திட்டு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கால்வாயில் நீர் திறக்க நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.