'ஷிவாலிக்' கப்பலைத் தொடர்ந்து, மற்றொரு எல்பிஜி கப்பலான 'நந்தா தேவி', 47,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான திரவ பெட்ரோலிய வாயுவுடன் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அண்மையில் 'ஷிவாலிக்' எல்பிஜியை ஏற்றிக் கொண்டு இந்தியா வந்தடைந்தது. இதன் மூலம் படிப்படியாக சிலிண்டர் வினியோகம் இந்தியாவில் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடங்களில் ஹோட்டல்களில் விறகு அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர்.