இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது. 1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி, தற்போது இந்த மைல்கல்லை அடைந்துள்ளது. இதற்கு, 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் கார்கள் விற்றுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.