சென்னை: அதிமுக-வின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.4) அறிவித்துள்ளார். அதில், “சிறுபான்மையின மகளிருக்கு வட்டியில்லாக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுகள் 3 சிலிண்டர்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையை அரசே ஏற்கும்” உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.