தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய 1,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்.30 முதல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்தும் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தடையற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு
போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.