தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று (மார்ச் 14) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முக்கிய மாற்றமாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக இருந்த பால நாக தேவி, தமிழக காவல்துறை உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள சந்தோஷ் குமார், கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.