விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அலம்பூண்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டது. பௌர்ணமி வழிபாட்டிற்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற அவர்களின் கார், அதிகாலை 7 மணியளவில் கார் 50 அடி தூரம் சென்று தடுப்பு சுவரில் மோதிய பின்னர் விவசாய கிணற்றில் மூழ்கியது. மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கார் மீட்கப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.