ராணிபேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில், வேகமாக சென்ற பைக் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.