உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷ்யா நேற்று (பிப். 10) நள்ளிரவு ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீதான இந்தத் தாக்குதலில் ஒரு குடும்பத்தின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது.