சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று (பிப்.23) இபிஎஸ்-ஐ சந்தித்த நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் C.P.பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ.ஜெயமணி ஆகியோர் 2026 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.