எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் ஈபிஎஸ்-க்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-ஐயும், பண்ருட்டி மோகன் அவரது ஆதரவாளர் கே.பி.முனுசாமியையும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22-லிருந்து 25 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.