ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (டிச.28) கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர், விசாரணைக்காக மீனவர்களை முகாமுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கடலோர கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.