கடலூர் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், எழுத்தூர் பகுதியில் லாரி மீது மோதி கடுமையாக சேதமடைந்தது. இதில் காரில் இருந்த பிரசாந்த் (30), ஐசக் (32), கர்ணன் (33) உயிரிழந்தனர். கிரி (25) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.