மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குன்னுவார்பட்டி பகுதியில் தோட்டத்தில் இன்று (மே 26) பருத்தி எடுத்துக் கொண்டிருந்தபோது கனமழை பெய்துள்ளது. அப்போது 4 பெண்கள் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர். தொடர்ந்து இடி, மின்னல் தாக்கியதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியம்மாள் ஆகிய 3 பேர் அங்கேயே உயிரிழந்தனர். வாசியம்மாள் என்ற ஒரு பெண் மட்டும் படுகாயங்களுடன் உசிலம்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.