இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 52 பந்தில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி, U19 ODI கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும், U19 ODI கிரிக்கெட் வரலாற்றில் 14 வயது 100 நாட்கள் என்ற இளம் வயதில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும், U19 ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 சிக்சர்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.