நெடுஞ்சாலையில் 30 அடி பள்ளம்.. வைரல் வீடியோ

101பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென 30 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சாலை திடீரென சரிந்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. விபத்து குறித்து உடனடியாக விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.