செய்யாத குற்றத்துக்கு சிறை.. நிரபராதியான அடுத்த நாளே மரணம்

7077பார்த்தது
செய்யாத குற்றத்துக்கு சிறை.. நிரபராதியான அடுத்த நாளே மரணம்
குஜராத்தில், பாபுபாய் என்ற காவலர் செய்யாத குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 30 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட  அடுத்த நாளே அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ரூ.20 லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்குப்பதிந்து, 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு சுமார் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்.04 அன்று விடுதலை செய்யப்பட்டார்.