உத்தரப் பிரதேச மாநிலத்தில், சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததாக தம்பதி மீது புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் 33 சிறுவர்களை பாலியல் வேட்டையாடி, ஆபாச படம் எடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கில், அந்த கொடூர தம்பதிக்கு தூக்கு தண்டனை விதித்து பாந்தா போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.