முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையின் பலம் தற்போது 35 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர்
விஜய் உள்ளிட்ட 10 பேர் பதவியேற்றனர்.
தொடர்ந்து நேற்று தவெக, காங்கிரஸின் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில்,
விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.