பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

9190பார்த்தது
பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தடை செய்யப்பட்ட தெஹரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில், கைபர் பத்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி