சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தொழிலாளர்கள் அனைவரும்
ஐபிஎல் இறுதிப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: சன் நியூஸ்