சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

22பார்த்தது
சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 14-ஆம் தேதி 2,240 பேருந்துகளும், 15-ஆம் தேதி 1,325 பேருந்துகளும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலின்றி சிரமமின்றிப் பயணிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி