தெற்கு ரயில்வேயில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் இயக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், 40 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக 62 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது தெற்கு ரயில்வே வரலாற்றில் முதல்முறை என்றும், எதிர்காலத்திலும் பயணிகளின் தேவைக்கேற்ப சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.