தெற்கு பெரு நாட்டின் அரேக்விபாவில் 60 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேற்று (நவ., 12) விபத்துக்குள்ளானது. இதில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 24 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேருந்தும், பிக்கப் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.