தேசிய தகவல் மையம் (NIC) 'அறிவியல், தொழில்நுட்ப உதவியாளர்-A' பணிக்காக 376 காலியிடங்களை அறிவித்துள்ளது.
கணினி அறிவியல், மின்னணுவியல், தரவு அறிவியல் துறைகளில் M.Sc., M.S., B.E. அல்லது B.Tech. பட்டமும், செல்லுபடியாகும் GATE மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். தேர்வு GATE மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும். மாத ஊதியம் ரூ.35,400 - ரூ.1,12,400. இணையவழியில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு https://recruitment.nic.in