நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே இன்று (பிப்.7) 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். சிறுவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தம்பர் பகதூர் பூரி கூறுகையில், வனப்பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் போன்ற ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் எடுத்தபோது வெடித்துள்ளது.