திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 நாட்கள் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து

10பார்த்தது
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 நாட்கள் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மே 28 முதல் மே 31 வரை, கட்டணமில்லா பொது தரிசன முறையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.