டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

2947பார்த்தது
டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
தெற்கு டெல்லி சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சைதுல் அஜாப் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளிலிருந்து 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ரேகா குப்தா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி