கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று (பிப்.28) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் தினில், அஜீஷ், விமல் மற்றும் ஷியாம்லால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரில் இருந்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.