தூத்துக்குடியில் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

3624பார்த்தது
தூத்துக்குடியில் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் கொலை வழக்கில், கருப்பசாமி, ராஜசேகர், கணேசன் மற்றும் முத்துசெல்வம் ஆகிய 4 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த காவல் துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி