மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த 7ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.