அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்.. அதிர்ச்சி சம்பவம்

6பார்த்தது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோவை - சேலம் நெடுஞ்சாலையில், ஒன்றன்பின் ஒன்றாக 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற ஆம்னி பேருந்து திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த வாகனங்கள் கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து மோதின. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பான  வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நன்றி:SunNews