சென்னை மாம்பாக்கம், மேடவாக்கம் சாலையின் மோசமான நிலையால், நேற்று நடந்த விபத்தில் 4 வயது சிறுவன் சுஷாந்த் உயிரிழந்தார். இதனை கண்டித்து பொன்மார் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமுறை அதிகரிகளிடம் முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.