ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுக்குடியைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார் ஆடுகளை வளர்த்து வருகிறார். அறுவடை முடிந்த வயலுக்கு சிலர் வைத்த தீ, இரவில் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த குடிலுக்குப் பரவியது. இதில் 40 செம்மறி ஆடுகள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.